New Updates! Fresh news just arrived.

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிபர் –...

News

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிபர் – பிரதேச சபை தவிசாளர் சந்திப்பு!

September 27, 2026 4:05 pm
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிபர் – பிரதேச சபை தவிசாளர் சந்திப்பு!
சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலனுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பிரதேசத்தின் தற்போதைய நிலைமை, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் நலனுக்காக முன்னெடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை யூ.எல்.எம். முகைதீன் பொது மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் தற்போதைய நிலைமையை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, குறித்த பார்வையாளர் அரங்கின் தற்போதைய நிலை, காணப்படும் தேவைகள் மற்றும் எதிர்காலத்தில் அதனை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பிலும் கள விஜயத்திலும் சம்மாந்துறை பிரதேச செயலாளரான எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரதேச சபையினுடைய உப தவிசாளரான வீ. வினோகாந்தன், பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். காலித், ஏ.சீ.எம். நயீம், எஸ். தனோஜன், எஸ்.எல்.ஏ. நஸார், எம்.எல்.ஏ. கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now