காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்! மக்களுக்கு வழ...
News
காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இடைவெப்பமண்டல ஒருங்கிணப்பு வலயத்தின் (ITCZ) தாக்கம் மற்றும் இலங்கைக்கு அருகில் உருவாகக்கூடிய கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக, இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் வாய்ப்பும் உள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.