New Updates! Fresh news just arrived.

வடமேல் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம்! ...

News

வடமேல் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம்!

July 14, 2026 2:02 pm
வடமேல் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம்!
வடமேல் மாகாணத்தின் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (15) முதல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்த பரீட்சைகள், ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 6 - 9 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.17 வரையிலும், 10 - 11 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.20 வரையிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி பரீட்சை நடவடிக்கைகளை நாளை முதல் 20 ஆம் திகதி வரை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய, இவ்வாறு பரீட்சையின் 4 நாட்களை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த 4 நாட்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையானது இன்றைய தினம் (14) வழங்கப்படவுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now