அடுத்த ஆண்டு முதல் பாலர் பாடசாலை கல்வி முறையில் ஏற்படவுள்...
News
அடுத்த ஆண்டு முதல் பாலர் பாடசாலை கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்
பாலர் பாடசாலை கல்வி கட்டமைப்பை முறைப்படுத்துவதற்கும், தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், 2027ஆம் ஆண்டு முதல் பாலர் பாடசாலைகளில் புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்படி பாலர் பாடசாலைக் கல்விக்கான தேசிய கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவகம் மூலம் 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஆரம்பகால குழந்தை பருவக் கல்வி பாடத்திட்ட கட்டமைப்பின்படி, ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளும் மாதிரிச் செயற்பாட்டுக் களஞ்சியங்களும் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை மாகாண மட்டத்திலான ஆசிரியர்களுக்கு புதிய கட்டமைப்பை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சீர்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டு முதல் முழுமையாக அமுலுக்குக் கொண்டுவரப்படும்.