New Updates! Fresh news just arrived.

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மாற்றம் – மக்களுக்கு எச்...

News

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை!

August 26, 2026 6:13 pm
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கான அடுத்த 24 மணிநேர வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சில கடற்பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதுடன், காற்றின் வேகமும் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு, திருகோணமலை வரையான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

கொழும்பு முதல் காலி, மாத்தறை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 3 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பேருவளை முதல் காலி, மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் மட்டம் உயரும்போது, அலைகள் கரையை அண்மித்த நிலப்பகுதிகளுக்குள் வரக்கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த கடற்பகுதிகளில் பயணம் மேற்கொள்வோர், மீனவர்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை நிலைமைகளை அவதானித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now