இலங்கை - இந்திய ஒருநாள் தொடருக்கான மைதானத்தில் மாற்றம் - ...
News
இலங்கை - இந்திய ஒருநாள் தொடருக்கான மைதானத்தில் மாற்றம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாக வ இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இந்த சுற்றுப்பயணம் 3 ஒருநாள் போட்டிகளையும் அத்தோடு 3 இருபதுக்கு - இருபது போட்டிகளையும் உள்ளடக்கியுள்ளது.
போட்டி அட்டவணையின்படி, இந்த முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 13 ஆம் திகதி டெல்லியில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வளிமாசடைவு மற்றும் டெல்லி மைதானத்தில் மேற்கொள்ள இருக்கின்ற புனரமைப்புப் பணிகள் என்பவற்றை முன்னிட்டு, போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கோரிக்கைக்கு இணங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடாத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.