New Updates! Fresh news just arrived.

பிற்பகல் 1 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் :...

News

பிற்பகல் 1 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்

April 16, 2026 12:42 pm
பிற்பகல் 1 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், மேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now