New Updates! Fresh news just arrived.

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து வானிலையில் ஏற்படவுள்ள மா...

News

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

April 18, 2026 9:36 am
எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று(18) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிவலக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில் வானிலை மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு, மாலையில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now