அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ...
News
அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் அமைச்சரான அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரரான தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அதிக விலையில் 'ஸ்பொட் டெண்டர்கள்' ஊடாக மசகு எண்ணெய் கொள்வனவு செய்ததின் மூலம் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்து இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.