New Updates! Fresh news just arrived.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவிற்கு குற்றப்...

News

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவிற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

July 7, 2026 3:44 pm
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவிற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரான சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகவும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளினை விடுதலை செய்துள்ள நீதிபதி, வெளிநாட்டுப் பயணத் தடையினையும் அவர்களுக்கு விதித்துள்ளார்.

பின்னர், பிரதிவாதிகளினுடைய கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டத்தோடு, குறித்த வழக்கினை எதிர்வருகின்ற ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கானது, இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல, கிரிஇப்பன்வெவ பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகளானது, 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது சேதமடைந்தன.

இதன்படி, இச் சொத்துகளுக்கான நட்டஈடு கோருவதினை அதிகாரிகள் நிராகரித்திருந்த போதிலும், அதற்கு மாறாக நட்டஈடு வழங்கும் அலுவலகத்தில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்குத் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து, 8,850,000 ரூபா நட்டஈட்டைப் பெற்றுக்கொண்டமையின் ஊடாக "ஊழல்" எனும் குற்றத்தினை புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே குறித்த வழக்கினை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now