New Updates! Fresh news just arrived.

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக...

News

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

April 30, 2026 3:23 pm
ஞானசார தேரருக்கு எதிராக  நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகள் மற்றும் பொதுக் கூட்டங்களின் போது, இஸ்லாம் மார்க்கத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலும், மதங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையிலும் ஞானசார தேரர் கருத்துக்களை வெளியிட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தினால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்க நீதியரசர் உத்தரவிட்டார். எனினும், கடுமையான பிணை நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைகளின் போது தவறாது ஆஜராக வேண்டும் எனவும் தேரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now