New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவி...

News

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கும் குற்றப்பத்திரிகை கையளிப்பு!

March 23, 2026 12:25 pm
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கும்  குற்றப்பத்திரிகை கையளிப்பு!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சரான அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினுடைய முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளினை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை மாநாட்டை மே மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

2017 - 2018 காலப்பகுதியில், ஆறு மாத காலத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் நாட்டிற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 03 நீண்டகால டெண்டர்களினை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக அதிக விலையிலான 27 உடனடி டெண்டர்களினை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக, கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தினை ஏற்படுத்தியமை மற்றும் அதற்குத் துணையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now