New Updates! Fresh news just arrived.

சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டு...

News

சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவருக்குப் பிணை!

October 23, 2026 5:28 pm
சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவருக்குப் பிணை!
ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரினையும் அவரது பொறியியலாளரான மகனையும் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையினுடைய தவிசாளர் உட்பட ஐவரினையும் பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையினுடைய தவிசாளர் உள்ளிட்ட குழுவினர், திஹகொட பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (22) கைது செய்யப்பட்டிருந்தனர்.

கிரிந்த நகரில் உள்ள வீதியொன்றில் மதில் ஒன்றினை அமைப்பது தொடர்பில் ஏற்பட்ட தர்க்கமே குறித்த சம்பவத்திற்கு மூலகாரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையினுடைய பொறியியலாளரான மகன் காரொன்றினை விலைக்கு வாங்கி வீட்டிற்குக் கொண்டு வந்ததினை அடுத்து, பக்கத்து காணியில் வசிக்கும் பிரதேச சபையினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குறித்த காரினை வெளியிலெடுக்க முடியாதவாறு தடையாகச் சுவரொன்றினுடைய பகுதியினை அமைத்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் சில நாட்கள் விடுமுறை பெற்று இச்சுவர் கட்டுமானத்தினை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு அமைவாக, சுவரின் சட்டப்பூர்வத் தன்மை குறித்த கலந்துரையாடவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தேவையான அறிக்கை ஒன்றினை தயார் செய்ய வேண்டியுள்ளதாகக் கூறி, பிரதேச சபை தவிசாளர் ஓய்வுபெற்ற ஆசிரியையினை மற்றும் அவரது மகனையும் நேற்று பிரதேச சபைக்கு அழைக்கப்பட்டு, அங்கு இவ்விருவரையும் பிரதேச சபையினுடைய அறையொன்றிற்குள் பூட்டி வைத்து உடல் மற்றும் உள ரீதியாகத் துன்புறுத்தியதாகக் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் அவரது மகன் திஹகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சட்டத்தினையும் அரசியல் அதிகாரத்தினையும் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தவிசாளர் மற்றும் அதிகாரிகளுட்பட ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இதுதொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், கைது செய்யப்பட்ட கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now