New Updates! Fresh news just arrived.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி ...

News

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய்!

May 12, 2026 7:59 pm
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய்!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துச் செய்திக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் குறித்த வாழ்த்துச் செய்திக்குத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X)வலைத்தளப் பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், "இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினுடைய வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகின்றேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடம் இருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் அளித்துள்ள நாகரீகமான பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now