டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம் - ...
News
டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நாட்டில் இடம்பெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே, அதன் தலைவரான பிரீதி இனோகா ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடுகளை ஆய்வு செய்த போது இது தெரியவந்து உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வன்முறைக்குள்ளாகுதல், தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்லாமல் இருத்தல், தாய்மார்கள் வெளிநாடு போதல், குடும்பத் தகராறுகள் அத்தோடு பெற்றோரின் விவாகரத்து, சிறுவர்கள் ஏனைய சிறுவர்களின் கண்ணியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் அத்துடன் துஷ்பிரயோகங்களில் ஈடுபடத் தூண்டுதல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமை மிகத்தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் அதிகளவில் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதனால் அவர்களின் சிறுவர் பருவ காலம் இழக்கப்பட்டு, கல்வியின் மீதான கவனமும், ஈடுபாடும் குறைகிறது. இவ்வாறான விடயங்களால் மனவலிமை மிக்க ஒரு பிள்ளையை உருவாக்குவது இன்று மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து வகையான உடலியல், பாலியல், உளவியல் அத்துடன் புறக்கணிப்பு போன்ற துஷ்பிரயோகங்களிலிருந்தும் சிறுவர்களைப் பாதுகாப்பதும், இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்களைப் பாதுகாப்பதும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முதன்மைப் பொறுப்பாகும் என்பதோடு, அதற்காகத்தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரீதி இனோகா ரணசிங்க மேலும் தெறிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களை ஒருபோதும் எவராலும் சமரசத்திற்கு உட்படுத்த முடியாது, அதனால் இவ்வாறான சம்பவங்கள் குறித்து தாமதிக்காமல் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் '1929' என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறும் தலைவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுவர்களைப் பாதுகாக்கும் முதன்மைப் பொறுப்பைத் தங்களது குடும்பத்திலிருந்தே தொடங்குமாறு கேட்டுக்கொள்வதோடு, அனைத்துச் சிறுவர்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.