சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்க வேண்டும் – பிரதமர்! -...
News
சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்க வேண்டும் – பிரதமர்!
வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்ளும் வகையில், சிறுவர்களுக்கு பாதுகாப்பு, புரிந்துணர்வு மற்றும் தன்னம்பிக்கையை வழங்குவது அவசியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புடன், சிறுவர்களின் உணர்வுசார் நலன், கண்ணியம் மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் சிறுவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் போன்ற ஆபத்துகளும் அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இணையம் மற்றும் இணையத்திற்கு வெளியான சூழல்களில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவர்களை பொருளாதாரச் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சிறுவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி கற்று தன்னம்பிக்கையுடன் வளர்வதற்கு அரசாங்கத்துடன் சமூகமும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.