New Updates! Fresh news just arrived.

கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சிறுவர் தின நிகழ...

News

கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு!

October 10, 2026 6:45 pm
கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு!
"திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்" எனும் தேசிய தொனிப்பொருளில், சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்ப்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் தலைமையில்,எம்.ஜி.எப்.கோல்ட் (MGF GOLD) நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று(09) இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும்முன்பள்ளிச் சிறுவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் முகாமாக ஓவியம் வரைதல், நாட்டார் பாடல் ,வினோத உடை போட்டி உட்பட மேலும் பல விளையாட்டு நிகழ்வுகள் இதன் போது இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்ஸான்,கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். ஏ. எம் ரஸீன்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை அமைப்பாளருமான எம்.ஜ.எம்.அப்துல் மனாப்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷித்,எம்.ஜி.எப்.கோல்ட் (MGF GOLD நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.எம். இல்லியாஸ், தேசமான்ய ஜவ்பர்கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறுவர் கழகங்களின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.என்.எம்.அப்ராஸ்,றாசிக் நபாயிஸ்,ஏ.எல்.எம். ஷினாஸ்)​
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now