ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா ஒப்புதல்: அமெரிக்க...
News
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா ஒப்புதல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடித் தகவல்!
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறந்து வைப்பது தொடர்பில் சீனா மகிழ்ச்சியடைவதாகவும், சீனாவுக்காகவும் உலகத்திற்காகவும் தாம் இதனைச் செய்திருப்பதாகவும் அதிபர்டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது எனவும் குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில வாரங்களில் தாம் மேற்கொள்ளவுள்ள சீனப் பயணத்தின் போது, அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனக்கு 'பெரிய' மற்றும் 'அழுத்தமான' கட்டித்தழுவல் ஊடாக வரவேற்பளிப்பார் எனவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
தாங்கள் இருவர் மிகவும் திறமையாகச் செயற்படுவதாகவும், சண்டையிடுவதினை விட இது சிறந்தது அல்லவா? எனவும் அமெரிக்க அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், தாங்கள் இருவரும் சண்டையிடுவதிலும் மிகவும் வல்லவர்கள் என்பதினை நினைவில் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் மற்றவர்களினை விட அதனை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் எனவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் வலியுறுத்தியுள்ளார்.