வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் சீன பிரஜை கைது!
News

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையோடு சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய குறித்த சந்தேகநபர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து எயார் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்கின்ற விமானத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளினை கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களினை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளினுடைய பெறுமதி 60 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையினை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் "பச்சை வழி" ஊடாக எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது விமான நிலையத்தினுடைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.