New Updates! Fresh news just arrived.

சுன்னாகம் பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை: இராணுவ சிப்...

News

சுன்னாகம் பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை: இராணுவ சிப்பாய் கைது!

February 25, 2026 9:49 pm
சுன்னாகம் பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை: இராணுவ சிப்பாய் கைது!
சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்டிருந்தஇராணுவ சிப்பாய் ஒருவரினை இன்ரூ (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரினுடைய தங்கச் சங்கிலியினை இராணுவ சிப்பாய் ஒருவரினால் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் குறித்த சந்தேகநபரான, மைலிட்டி இராணுவ முகாமில் கடமை புரிகின்ற சிப்பாய் ஒருவரினை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுடைய புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமையானது குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now