New Updates! Fresh news just arrived.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்: 700 கைதிகள் வே...

News

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்: 700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

July 6, 2026 9:48 pm
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்: 700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக்கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) முதல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now