New Updates! Fresh news just arrived.

காலநிலை மாற்றம்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அதிர...

News

காலநிலை மாற்றம்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு!

June 23, 2026 8:37 pm
காலநிலை மாற்றம்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு!
ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களினை கருத்திற் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பினை பராமரிப்பது அத்தியாவசியமானது எனவும் இது ஒரு சாதாரண நடைமுறையாக அன்றி, விசேட கவனத்திற்குரிய ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபோக நெல் கொள்வனவுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களினை வழங்கிய நிலையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருட சிறுபோகத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நெல் இருப்புக்கள் இன்னும் போதுமான அளவில் சந்தைக்கு விநியோகிக்கப்படாமை ஒரு பிரச்சினையாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, குறித்த நெல் களஞ்சியசாலைகளினை விடுவிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் தொடர்பிலும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்தோடு, இந்த சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குக் தேவையான நிதியினை ஒதுக்குமாறு நிதி அமைச்சினுடைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கலந்துரையாடலில் உத்தரவிட்டுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் தற்போதுள்ள களஞ்சியசாலைகளினுடைய நிலைமைகள் குறித்தும் அங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

களஞ்சியசாலைகளின் நிலைமை மற்றும் பாதுகாப்பான இருப்புக்கள் தொடர்பில் துல்லியமான தரவு அமைப்பு ஒன்றினை பராமரிப்பதன் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இது போன்ற பிரச்சினைகளினை தவிர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான தேவையான நடவடிக்கைகளினை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now