New Updates! Fresh news just arrived.

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் ...

News

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

April 12, 2026 7:02 pm
பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டைப் பகுதியில் உள்ள யோதகண்டிய போதி மஹா விகாரை, நாக மஹா விகாரை மற்றும் சித்தல்பவ்வ மகுல் மஹா விகாரை ஆகிய இடங்களுக்கு இன்று (12) விஜயம் செய்த அவர், அங்குள்ள தேரர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் என மக்கள் எதிர்பார்த்த போதிலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவில் அதிகரித்துள்ளன.

உரம் தட்டுப்பாடு போன்ற நிலைமைகளால் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

பொருட்களின் விலை அதிகரிப்புக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேள்வி எழுப்புவதாகவும், இந்தத் தருணத்தில் எரிபொருள், எரிவாயு விலைகள் மட்டுமன்றி மின்சாரக் கட்டணம், உணவு, உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகளுக்கு இன்னும் தீர்வை வழங்க முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now