New Updates! Fresh news just arrived.

அனர்த்தத்தால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!

News

அனர்த்தத்தால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!

February 9, 2026 12:30 pm
அனர்த்தத்தால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!
டித்வா புயலால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்திருப்பதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தினுடைய தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில், பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மாடுகள், பன்றிகள் மற்றும் ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு குறித்த இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த இழப்பீட்டுத் தொகைகளுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி உதவியின் கீழ் இதற்காக 2.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளினை நோய்களில் இருந்து பாதுகாப்பதே குறித்த தடுப்பூசி செயல்முறையின் நோக்கம் எனவும், இது சுமார் 2 மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

அத்தோடு, அனர்த்தங்களினால் அழிக்கப்பட்ட பண்ணைகளினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவும் வழங்கப்படும் எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now