பொலிஸ் சேவைகள் குறித்து புகார், பாராட்டு இனி ஆன்லைனில் - ...
News
பொலிஸ் சேவைகள் குறித்து புகார், பாராட்டு இனி ஆன்லைனில் - புதிய திட்டம் ஆரம்பம்!
இலங்கை பொலிஸாரின் சேவைகள் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளை எளிதாகப் பெறும் நோக்கில் புதிய QR குறியீட்டு (QR Code) முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் சேவைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக கருத்து தெரிவிக்கக்கூடிய வகையில் “Sri Lanka Police Community Feedback Portal” என்ற இணையவழி டிஜிட்டல் தளம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பின் மூலம், குடிமக்கள் தங்களின் முறைப்பாடுகள், ஆலோசனைகள் அல்லது பாராட்டுக்களை எளிதாக பதிவு செய்ய முடியும் எனவும், அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு மக்கள் மையப்படுத்தப்பட்ட திறமையான சேவையை வழங்க உதவும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் கருத்து, முறைப்பாடு, பாராட்டு அல்லது ஆலோசனை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கலாம். தேவையானால் தனிப்பட்ட விபரங்களையும் உள்ளிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான விவரங்கள் மற்றும் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தரும் காரணம் போன்ற தகவல்களையும் இந்த தளத்தில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் E-Services பகுதியின் மூலமும் அணுக முடியும்.
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வரவேற்பு பிரிவு மற்றும் முறைப்பாட்டு பிரிவுகளுக்கு அருகில் QR குறியீட்டு பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்த புதிய முறைமையைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி, அதன் பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.