New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான முறைப்பாடு ...

News

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு!

January 30, 2026 2:47 pm
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு!
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டம் ஒன்றினை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தினை ஏற்படுத்திய சம்பவம் குறித்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டினை ஜூலை 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த முறைப்பாடு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விடயங்களினை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினுடைய அதிகாரிகள், குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், அதன் முன்னேற்றத்தினை அறிக்கையிடுவதற்கு திகதி ஒன்றை வழங்குமாறும் கோரியிருந்தனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களினை ஆராய்ந்த நீதவான், முறைப்பாட்டினை ஜூலை 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கு திகதியிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தினை அறிக்கையிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now