New Updates! Fresh news just arrived.

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எத...

News

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

November 9, 2026 8:22 pm
கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2026.01.16 அன்று கதிரியக்கவியலாளர் பதவிநிலைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்த நிலையில், இவர்களைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக அண்மையில் (30.10.2026) வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் பௌதிகவியல் பாடத்தில் 'திறமைச் சித்தி' (Credit/Distinction) கோரப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரத்தில் சாதாரண சித்தியுடன் (Ordinary Pass) குறித்த பட்டப்படிப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த பல பட்டதாரிகள், தற்போது திடீரெனக் கோரப்பட்டுள்ள இத்தகுதியால் குறித்த பதவி நிலைக்கு உள்வாங்கப்படுவதில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவையேனும் தொழில் தகைமைக்கு விசேட தகுதிகளைக் கோரும்போது அது எவ்விதத்திலும் அடிப்படை உரிமை மீறலாக அமையக்கூடாது என இலங்கையில் பல்வேறு தீர்க்கப்பட்ட வழக்குகள் சுட்டிக்காட்டியுள்ளன. உயர்தரத்தில் சாதாரண சித்தி பெற்று, பல்கலைக்கழகத்தில் திறமைச் சித்தி பெற்ற மாணவர்களைவிட அதிக புள்ளிகளைப் பெற்றுப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களை, பதவி உள்ளீர்ப்பின்போது திடீரென மாற்றங்களைக் கொண்டுவந்து அவர்களின் தகுதியைப் பறிப்பது இலங்கையின் அரசியலமைப்பின் 12 மற்றும் 14 ஆம் உறுப்புரைகளை மீறுவதாக அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பில் சட்டத்தரணிகளான அ. நிதான்சன் மற்றும் டலிமா ஹலிஸ்ரா ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் அடிப்படையிலும் குறித்த முறைப்பாடு இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now