இரகசிய தகவல்: பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்ப...
News
இரகசிய தகவல்: பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரினுடைய பங்களிப்புடன் நாகர்கோவில் கிழக்கு பிரதேச காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
நாகர்கோவில் கிழக்கு பகுதியினுடைய அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களானது மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததினையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து குறித்த பகுதியை முற்றுகையிட்டனர்.
இதன்படி, குறித்த காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்திய அதிகாரிகள், அங்கு மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சர்வதேச சந்தையில் அதிக பணப் பெறுமதியுடைய ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய பார்சல்களினை மீட்டெடுத்தனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருளின் மொத்த நிறை மற்றும் அதன் துல்லியமான சந்தைப் பெறுமதி என்பவற்றினை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியிலுள்ள முக்கிய சூத்திரதாரிகள் யார்? இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? மற்றும் யாருக்கு விநியோகிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தன? என்பது தொடர்பில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேல் விசாரணைகளினை முடுக்கிவிட்டுள்ளனர்.
இப்பகுதியில் போதைப்பொருள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், குறித்த மீட்பு நடவடிக்கை கடத்தல்காரர்களுக்கு பெரும் பலத்த அடியாகக் கருதப்படுகின்றது.
பூ.லின்ரன்