New Updates! Fresh news just arrived.

திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்...

News

திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்

May 7, 2026 11:17 am
திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்
அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளுக்கு மேலதிக நிதி இரண்டு முறை செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து நாடாளுமன்றம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ‘Free Lawyers’ அமைப்பு சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபையூடாக (Welfare Benefits Board) சுமார் 5000 இலட்சம் ரூபாவிற்கும் (500 மில்லியன்) சற்றே குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி ஏப்ரல் மாதத்தில் அஸ்வெசும நன்மைகளைப் பெற வேண்டிய சுமார் பதினேழு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் (1,7,33,000) குடும்பங்களுக்கு இவ்வாறு மேலதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக ‘Free Lawyers’ ' அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனதற்கு நிகரான வகையில் அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை அல்லது மேலதிகமாக நிதி வழங்கப்பட்டமையானது இன்றைய அரச நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குழப்பம் மற்றும் பொறுப்பற்ற தன்மையை நன்கு பிரதிபலிக்கிறது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now