New Updates! Fresh news just arrived.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடமாற்றம் பெறும் வைத்தி...

News

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடமாற்றம் பெறும் வைத்தியர்களுக்கு பாராட்டு நிகழ்வு!

February 10, 2026 12:48 pm
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடமாற்றம் பெறும் வைத்தியர்களுக்கு பாராட்டு நிகழ்வு!
மக்களுக்கான சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லும் வைத்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று (09) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.பாறூக், அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் டாக்டர் ஏ.ஜே.எம். அஸ்ரி, தர நிர்ணய பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி கே.எல்.எம்.றைஸ் உட்பட வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றியவர்கள், இடமாற்றம் பெறும் வைத்தியர்கள் மக்களின் நலனுக்காக ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டியதுடன், அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பான சேவை வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும் சுகாதார சேவையின் தர உயர்வுக்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

நிகழ்வின் இறுதியில், சேவை புரிந்த வைத்தியர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் எதிர்கால பணிப் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now