New Updates! Fresh news just arrived.

உதய கம்மன்பில நிரபராதியாக கருதி விடுதலை!

News

உதய கம்மன்பில நிரபராதியாக கருதி விடுதலை!

September 29, 2026 1:26 pm
உதய கம்மன்பில நிரபராதியாக கருதி விடுதலை!
அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளினை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாவினை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவினை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்பு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட குறித்த தீர்ப்பை வழங்கினார்.

குறித்த தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியான உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கமைவாகவே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொழிலதிபராகிய பிரையன் ஷாடிக் (Brian Shaddick) என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளினை போலி அதிகாரப் பத்திரத்தை பயன்படுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாவினை நிதி மோசடி புரிந்ததாகக் கூறி, கடந்த 'நல்லாட்சி' அரசாங்கத்தின் காலத்தில் உதய கம்மன்பிலவிற்கு எதிராக குறித்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now