கோனபொல பகுதியில் கொள்கலன் வாகனம் விபத்து – போக்குவரத்து ப...
News
கோனபொல பகுதியில் கொள்கலன் வாகனம் விபத்து – போக்குவரத்து பாதிப்பு!
ஹொரணை–கொழும்பு பிரதான வீதியில் கோனபொல சந்திக்கு அருகில் இன்று (29) அதிகாலை கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகாலை சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் வீதியின் ஒரு பாதையில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வளைவொன்றை கடக்க முற்பட்டபோது அதிக வேகத்தில் பயணித்தமை காரணமாக சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.