சமையல் எரிவாயு முறைகேடுகள்: முறைப்பாடு செய்ய நுகர்வோர் ...
News
சமையல் எரிவாயு முறைகேடுகள்: முறைப்பாடு செய்ய நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள அறிவிப்பு!
சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத் தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பொதுமக்கள் மற்றும் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பிரதேசங்களில் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் பின்வரும் அநீதிகள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:
எரிவாயுவை வழங்க மறுத்தல், எரிவாயுவை மறைத்து வைத்தல் (செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குதல்), விற்பனை செய்ய மறுத்தல் , நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், மேற்குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயற்பாடுகள் உங்கள் பிரதேசத்தில் இடம்பெற்றால், உடனடியாக அருகிலுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) மாவட்ட அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துமாறும் அல்லது 1977 என்ற நுகர்வோர் முறைப்பாட்டுத் துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறு
"நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்போம்! நியாயமான விலையில் எரிவாயுவைப் பெறுவோம்!" என்ற தொனிப்பொருளில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேலும் தெரிவித்துள்ளது.
பாறுக் ஷிஹான்