இன்று தொடக்கம் தபால் கட்டணங்களில் திருத்தம்!
News

இன்று (09) முதல் தபால் கட்டணங்களினை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களத்தின் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தினை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்தப் புதிய கட்டணங்கள் இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமிலிருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமிலிருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்துவந்த 30 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது.
மேலும், அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களினூடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயிலிருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையினுடைய விலை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், சாதாரண பொதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படாது என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.