New Updates! Fresh news just arrived.

பருத்தித்துறை நகர சபை அமர்வு!

News

பருத்தித்துறை நகர சபை அமர்வு!

April 30, 2026 7:14 pm
பருத்தித்துறை நகர சபை அமர்வு!
பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமானது.

இதில் முதலாவதாக கடந்த கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சபைக்கு அறிவிக்கபட்டு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட நகர சபை எல்லைக்குட்பட்ட கழிவுநீர் வாய்க்கால்களுக்குள் கழிவு நீரை மட்டும் அகற்றுவது என்றும், ஏனைய கழிவு பொருட்களை வெளியேற்றுவோருக்கு தடை விதிப்பதும், எதிராக உரிய நடவடிக்கை எடுப்பது என்றும்,
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், மரக்கறிச் சந்தை துவிச்சக்கர வண்டி குத்தகை தொடர்பாகவும்,

நகர் பகுதியில் கமரா கண்காணிப்புக்காக கேமரா கொள்வனவு தொடர்பாகவும், திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளுக்கான பருத்துத்துறை பிரதேச சபையுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பாகவும், பொதுவான அவசரமான பராமரிப்பு வேலைகளுக்காக பெறுகை நடைமுறைகளை பின்பற்றுவதால் சிரமத்தையும், கால தாமதம் ஏற்படுவதனால் வேலைகளை விரிவுபடுத்தி மேற்கொள்வதற்கு ஏதுவாக தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை நாட்கூலி அடிப்படையில் பெற்று பயன்படுத்துவது தொடர்பாகவும், பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி சபையால் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பாகவும், நகர சபைக்கு உட்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கட்டிட அனுமதி தொடர்பாகவும், நகர சபை எல்லைக்கு உட்பட்ட கோரியடி கடற்கரையில் நடமாடும் இரு கடைகள் அமைப்பது தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன்
நவீன சந்தை தொகுதியில் வாடகை ஒப்பந்த பெயர் மாற்றத்திற்கான சபை அனுமதியும், பிரதேச செயலார் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச நீர் இணைப்பு வழங்குவதற்கு அமைச்சினார் அனுமதி வழங்கப்பட்டுள்ள 160 இலவசமாக அனுமதியை அங்கீகரித்தலும்,
2021, 2022 ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட முத்திரை தீர்வு நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கான சபை அனுமதியும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பன்னங்கண்டி வீதியும், இரண்டாவதாக கண்ணை அம்மன் கோவில் வீதியும் உள்மையால் அதற்கான தழுவல் அனுமதி உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை தேசிய கணக்கு ஆய்வு அறிக்கையில் சட்டிக் காட்டப்பட்ட நிறுவனத்தி கபல லட்சம் ரூபாய் நிதி கையாளிடம் பல மில்லியன் ரூபாய் நிதி கையாள்கை இடம் பெற்றுள்ளதாக கணக்கு ஆய்வு திணைக்களத்தின் அறிக்கையை தவிசாளர் சபைக்கு வாசித்தார் பிற்பகல் 11 45 மணியளவில் நடைபெற்றது நிறைவுற்றது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now