New Updates! Fresh news just arrived.

பருத்தித்துறை நகரசபை மாதாந்த அமர்வு: முச்சக்கர வண்டி தரிப...

News

பருத்தித்துறை நகரசபை மாதாந்த அமர்வு: முச்சக்கர வண்டி தரிப்பிட நிழற்குடை விவகாரம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார் உறுப்பினர் ஜெயகோபி!

May 1, 2026 4:12 am
பருத்தித்துறை நகரசபை மாதாந்த அமர்வு: முச்சக்கர வண்டி தரிப்பிட நிழற்குடை விவகாரம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார் உறுப்பினர் ஜெயகோபி!
பருத்தித்துறை நகரசபையினுடைய ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்த அமர்வு நேற்று (30) நடைபெற்ற நிலையில், நகரினுடைய நீண்டகாலத் தேவையாகவுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட நிழற்குடை விவகாரம் தொடர்பில் உறுப்பினர் ஜெயகோபி சபையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்து உரிய தீர்வை வலியுறுத்தினார்.

பருத்தித்துறை நகர ஆட்டோ சங்கத்தினுடைய நீண்டகால வேண்டுகோளான, பயணிகளுக்கும் சாரதிகளுக்கும் அவசியமான நிழல்குடையை அமைப்பதற்கான கோரிக்கையினை, சங்க நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கமைய உறுப்பினர் ஜெயகோபி ஏற்கனவே சபையில் சமர்ப்பித்திருந்த நிலையில்,இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில், பணிகளினை விரைவாக முன்னெடுக்க முன்னதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நிழற்குடையானது எட்டு அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைக்கு மாறாக, சில வாரங்களுக்கு முன்னர் அதனை ஆறு அடியாகக் குறைத்து அமைப்பதற்கான முயற்சிகளானது மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முச்சக்கர வண்டி சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து, உரிய அளவுப்பிரமாணத்திலேயே (எட்டு அடி) அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டு நீண்ட நாட்கள் கடந்தும் இதுவரைக்கும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போதைய கடும் வெயில் காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதினை சுட்டிக்காட்டிய உறுப்பினர் ஜெயகோபி, அமர்வில் பின்வரும் விடயங்களினை முன்வைத்தார்

நிழற்குடை அமைக்கும் பணிகளினை தொடங்குவதற்கு தடையாகவுள்ள காரணங்கள் என்ன?

மக்களின் பாதிப்பினை கருத்தில் கொண்டு உடனடியாக பணிகளினை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம்.

குறித்த வேலைத்திட்டத்தினை இனியும் தாமதிக்காமல் துரிதப்படுத்துமாறு அவர் சபையில் வலியுறுத்தினார்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now