New Updates! Fresh news just arrived.

சிறுவர் இல்லத்தில் சிறுவனை சித்திரவதை செய்த தம்பதியினர் க...

News

சிறுவர் இல்லத்தில் சிறுவனை சித்திரவதை செய்த தம்பதியினர் கைது!

September 4, 2026 1:14 pm
சிறுவர் இல்லத்தில் சிறுவனை சித்திரவதை செய்த தம்பதியினர் கைது!
கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி வந்த 16 வயது சிறுவனை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக, தலத்துவோயா பொலிஸார் குறித்த இல்லத்தின் காப்பாளரையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூளைத் தூவி சித்திரவதை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், மராசன மருத்துவமனையிலும் பின்னர் கண்டி தேசிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, சந்தேக நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தலத்துவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now