New Updates! Fresh news just arrived.

பவானி வீதி குறித்து மற்றுமோர் வழக்கை கண்டிப்புடன் தள்ளுபட...

News

பவானி வீதி குறித்து மற்றுமோர் வழக்கை கண்டிப்புடன் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

August 8, 2026 5:14 pm
பவானி வீதி குறித்து மற்றுமோர் வழக்கை கண்டிப்புடன் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிர மிக்கப்பட்ட பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் நிலஅளவைத் திணைக்களத் தினரிடம் அண்மையில் அடையாளம் காட்டியிருந்தார். இதையடுத்து, அந்த வீதியை விடுவிக்க வலி வடக்குப் பிரதே சசபை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு எதிராகப் பலாலிப் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தநிலையில், அந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, 'வலி வடக்கு பிரதேசசபை மேற்கொள்ளும் வீதி விடுவிப்பு முயற்சிகளை பொது அமைதிக்குப் பங்கமான செயற்பாடு என்று கருதித் தடைபோட முடியாது' என நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனால் பிரதேசசபையால் எப்போது வேண்டுமானாலும் வீதியை விடுவிக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடை விதிக்குமாறு அரசியலமைப்பின் 66ஆம் பிரிவின் கீழ் தெல்லிப்பழைப் பொலிஸார் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பவானி வீதி தொடர்பில் இதற்கு மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மேல் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் பொலிஸாரிடம் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now