New Updates! Fresh news just arrived.

'சுப்பிரமணியம்' நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிம...

News

'சுப்பிரமணியம்' நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் 100 ரூபா அபராதம்: சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பு!

September 22, 2026 10:03 pm
'சுப்பிரமணியம்' நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் 100 ரூபா அபராதம்: சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பு!
கதிர்காம யாத்திரிகர்களோடு நடைபயணமாகச் சென்ற 'சுப்பிரமணியம்' என்று அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்த நிலையில், அவருக்கு 100 ரூபா அபராதத்தினை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்முனை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், 2026 ஜூன் 28 ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபர் 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த வழக்கு அண்மையில் (செப்டம்பர் 07) திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகநபர் மன்றில் ஆஜரானார்.

இதன்போது, சுப்பிரமணியம் என்னும் நாயைத் தாக்கிய குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட சந்தேகநபருக்கு 100 ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையினை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்தும் நீதவான் தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையைச் செலுத்தியதினைத் தொடர்ந்து, சந்தேகநபர் குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now