New Updates! Fresh news just arrived.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் ...

News

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

September 15, 2026 4:27 pm
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) அழைக்கப்பட்ட போது, அரசுத் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில், அரச புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகரான ரஞ்சன் செனரத் பண்டார விசாரணைக்குத் தேவையான நபர் என்பதாலும், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாலும், அவர் வெளிநாடு செல்வதைத் தடுத்து நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இயக்குநருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சலே தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now