New Updates! Fresh news just arrived.

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்! - G...

News

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

April 24, 2026 6:48 pm
பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!
குற்றவாளி கூண்டில் இருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களினை சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையினை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் இன்று (24) நிராகரித்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக கடமையினை சரிவர நிறைவேற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, முன்னாள் பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தர குறித்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சிகளாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான வருண ஜயசுந்தர ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now