சுரேஷ் சலேவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்ம...
News
சுரேஷ் சலேவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையினுடைய முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலேவை விசேட வைத்திய சபை முன்னிலையில் ஆஜர்படுத்தி அறிக்கை ஒன்றினைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மீதான உத்தரவை எதிர்வருகின்ற 10ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சுரேஷ் சலே சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவானது இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அங்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையினை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.