New Updates! Fresh news just arrived.

மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு -...

News

மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

November 11, 2026 8:19 pm
மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம் உகன பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பகுதியில் வனக்காட்டுக்குள் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கிப் பரிதாபமாக உயிரிடைந்துள்ளார்.

மகாகண்டிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலகே உபசேன ரத்நாயக்க (வயது 44) என்பவரே இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.

இவர் வழக்கம்போல் தினமும் தனது பசுக்களை அப்பகுதியிலுள்ள வனக்காப்புப் பகுதிக்குள் ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு, மாலையில் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழமையாகும். அதனடிப்படையில் கடந்த 10ஆம் திகதி மாலையும் பசுக்களுடன் வனப்பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை, திடீரென எதிர்ப்பட்ட காட்டு யானை அவரைத் தீவிரமாகத் தாக்கியுள்ளது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இவர் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும்இ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார ரத்நாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், அம்பாறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்-2 பண்டார திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில் உஹானா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், வனவிலங்குத் திணைக்களத்தின் அம்பாறை கள குழுவினரும் இச்சம்பவம் தொடர்பில் கள ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை பிராந்தியத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மனித-யானை மோதல் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now