CPR உயிர்காக்கும் பயிற்சி: 30 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...
News
CPR உயிர்காக்கும் பயிற்சி: 30 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு!
சம்மாந்துறையில் உயிர்காக்கும் அவசரகால முதலுதவி நடவடிக்கைகள் குறித்தான அறிவையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கில், டாக்டர் ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையினுடைய பூரண அனுசரணையில் CPR பயிற்சி நிகழ்வானது நேற்று (17) சம்மாந்துறை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
டாக்டர் ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியப் பணிப்பாளர் டாக்டர் சாகிர் ஜமால்டீன், வைத்தியசாலையின் முகாமையாளர்களான டாக்டர் கலாமுத்தீன், யு.எல்.எம். றியாஸ், எஸ்.எம். அஜ்வத் மற்றும் CPR நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் எஸ். பாத்திமா நிஹாறா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மேலும், விசேட வளவாளராகத் திருமதி ரோகிணியும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் உறுப்பினர்களான ஜெமின் மற்றும் எஸ்.எம். பிரோஸ் என பலரும் பங்கேற்றனர்.
CPR எனப்படுகின்ற இதய நுரையீரல் மீளுயிர்ப்புப் பயிற்சியானது, ஒருவருக்கு திடீரென இதயச் செயலிழப்பு ஏற்படுகின்ற போது சந்தர்ப்பத்தில், அவசர மருத்துவ உதவி கிடைக்கும் வரைக்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கான அடிப்படை நடவடிக்கைகளினை அறிந்துகொள்ள உதவுகின்றது.
இதன்படி, அவசரகாலச் சூழ்நிலைகளின் போது உரிய முறையில் செயற்படுவதற்கான அறிவினையும் திறனையும் இளைஞர்களிடையே மேம்படுத்துகின்ற வகையில் குறித்த பயிற்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டாக்டர் ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையினுடைய பூரண அனுசரணையில் நடைபெற்ற குறித்த நிகழ்வு, உயிர்காக்கும் முதலுதவிப் பயிற்சியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.
தில்சாத் பர்வீஸ்