New Updates! Fresh news just arrived.

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தையில் நெருக்கடி!

News

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தையில் நெருக்கடி!

April 18, 2026 7:15 pm
அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தையில் நெருக்கடி!
அமெரிக்காவுடனான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் இதைத் தெரிவித்து, இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அதிகாரிகள் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் கடல்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிக்கைகளும், சமீபத்திய செய்திப் பரிமாற்றங்களில் அமெரிக்கா முன்வைத்த அதீத கோரிக்கைகளுமே இதற்குக் காரணம்.

அதன்படி, இந்தக் கோரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான உடன்பாட்டை ஈரான் இன்னும் எட்டவில்லை என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், போர்நிறுத்தக் காலம் முடிவதற்குள் ஈரான் ஒரு நிரந்தர உடன்பாட்டை எட்டத் தவறினால், அவர்கள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான தற்போதைய போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், அது நீட்டிக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு போர் வெடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now