New Updates! Fresh news just arrived.

100 டொலரைக் கடந்த கச்சா எண்ணெய் விலை

News

100 டொலரைக் கடந்த கச்சா எண்ணெய் விலை

October 23, 2026 8:21 pm
100 டொலரைக் கடந்த கச்சா எண்ணெய் விலை
வெளிநாட்டு ஊடகங்கள் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக
செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, கச்சா எண்ணெய் விலையானது இந்த ஆண்டின் மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.55% உயர்ந்துள்ளதோடு, அதன் விலை 101.0 அமெரிக்க டொலராகப் உயர்ந்துள்ளது.

அதேபோல், BRENT கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.25% உயர்ந்துள்ளதோடு, அதன் புதிய விலை 114.6 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

MURBAN ரக கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளதுடன், அதற்கமைய அதன் புதிய விலை 114.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், அது 3.81% உயர்வைக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலையேற்றம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now