New Updates! Fresh news just arrived.

கச்சா எண்ணெய் விலை ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!...

News

கச்சா எண்ணெய் விலை ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!

October 24, 2026 9:39 am
கச்சா எண்ணெய் விலை ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையின் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களே உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் பிரதான அளவுகோல் 'பிரெண்ட்' (Brent) ரக கச்சா எண்ணெய். இதன் பீப்பாய் ஒன்றின் விலை 3.55 அமெரிக்க டொலரால் (3.14%) அதிகரித்துள்ளதனால் ஒரு பீப்பாய் விலை 116.72 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

உலகளவில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெயில் 60% அதிகமானவற்றின் விலை இந்த 'பிரென்ட்' விலையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின்னரான கடந்த 6 மாத காலத்தில் பதிவான மிகவும் உயர்ந்த விலையாக கருதப்படுகின்றது.

இதே வேளை, அமெரிக்காவின் 'டபிள்யூ.டி.ஐ' (WTI) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.80 அமெரிக்க டொலரால் (3.8%) அதிகரித்துள்ளதனால் ஒரு பீப்பாயின் விலை 103.27 அமெரிக்க டொலராகப் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இந்த வாரத்தில் மட்டும் பிரெண்ட் ரக எண்ணெயின் விலை 6% , டபிள்யூ.டி.ஐ ரக எண்ணெயின் விலை 2.3% ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவுக்கும் யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளதனால், சவூதி அரேபியா மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now