New Updates! Fresh news just arrived.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் மேல் சரிவு! - G...

News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் மேல் சரிவு!

November 3, 2026 11:23 am
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் மேல் சரிவு!
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் அதிகமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.63% சரிவடைந்து, 104.77 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதே இந்த விலை சரிவுக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடுமையான நிபந்தனைகளின் கீழ் ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரான் யோசனை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஈரானிய தேசிய பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாயிக்கு புதிய பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது பல மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஈரான் தொடர்பாக மேற்கொண்ட உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now