New Updates! Fresh news just arrived.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத தொடக...

News

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத தொடக்கத்தில்

July 11, 2026 3:29 pm
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத தொடக்கத்தில்
சமீபத்தில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவிற்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே அறிவித்துள்ளார்.

இவ்விண்ணப்பதாரர்களில் இருந்து, மொத்தம் 42,937 மாணவ, மாணவிகள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவுள்ளனர்.

அத்துடன், பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பல புதிய பட்டப்படிப்புகளை ஸ்தாபிக்கவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் புதிய கல்வி நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதாக பேராசிரியர் வசந்த லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now