New Updates! Fresh news just arrived.

இன்றும் சுழற்சி முறை மின்வெட்டு - உங்கள் பகுதிக்கான நேரம்...

News

இன்றும் சுழற்சி முறை மின்வெட்டு - உங்கள் பகுதிக்கான நேரம் இதோ!

October 20, 2026 9:46 am
இன்றும் சுழற்சி முறை மின்வெட்டு - உங்கள் பகுதிக்கான நேரம் இதோ!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் செயலிழந்தமை காரணமாக, இன்றைய தினத்திலும் (20) நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator) நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (19) தெரிவித்தது.

இதன்படி, இன்றைய தினமும் மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள், நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் தலா ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இருப்பினும், வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையின் காரணமாக, நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது முழுமையாகச் செயலிழந்துள்ளன.

இதனால் தேசிய மின்கட்டமைப்பில் ஏற்படும் மின் பற்றாக்குறையை முகாமை செய்யும் நோக்கில், தினசரி ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட நிலையில், இன்றும் நாளையும் (21) இவ்வாறு மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now